நாகர்கோவில் பெங்களூர் ரயிலை குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் ரத்து செய்துவிட்டனார் இதனால் பெங்களூர் தமிழ்நாடு தென் மாவட்ட பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர் பெங்களூர் கார்மேலராம் ரயில்வே நிலையம் அருகே ஐ.டி கம்பெனிகள் தனியார் நிறுவனங்கள் ஸ்கூல் வணிக நிறுவனங்கள் என ஏராளமான தனியார் துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன இப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் அதேபோல் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து படித்த பல்வேறு நபர்கள் இங்கு உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர் குறிப்பாக தென் மாவட்டங்கள் வட மாவட்டங்களில் இருந்து ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர் பல காலமாக இங்கு இயங்கி வரும் கார்மேலராம் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் நின்று செல்கின்றன குறிப்பாக சில வருடங்களாக நாகர்கோவில் முதல் பெங்களூர் வரை இயங்கும் 17236/17235 ரயில் கார்மேலாராம் ரயில் நிலையத்தில் நின்று சென்றன சில மாதங்களாக இந்த ரயில் நிலையத்தில் மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நிற்காமல் செல்கின்றன எஸ்.எம்.வி.டி ரயில் நிலையத்தில் இருந்து ஒசூர் வரை 47 கிலோ மீட்டர் கார்மேலராம் ரயில் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.வி.டி ரயில் நிலையம் 17 கிலோமீட்டர் சென்று பயணிகள் ரயில் ஏற வேண்டும் அல்லது கார்மேலராம் ரயில் நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் தமிழ்நாடு (ஒசூர் )சென்று ரயில் ஏற வேண்டும் இந்த ரயிலை நிறுத்தாததற்கு காரணம் பொதுப்பெட்டி நடைமேடையை தாண்டி நிற்பதாக புகார் மனு வந்ததால் தற்போது நிற்காமல் செல்கின்றன இந்த ரயிலை நம்பி வட தென் மாவட்டங்கள் மக்கள் மற்றும் வணிக பயனாளர்கள் பயணம் செய்ய ஏதுவாக சரியான நேரத்தில் வேலைக்கு வரும் பொழுதும் வேலை விட்டு சொந்த ஊருக்கு செல்லும் பொழுது வசதியாக இருந்தன பல ரயில்கள் கார்மேலராம் ரயில் நிலையத்தில் நிற்கின்றன குறிப்பாக இந்த ரயிலை மட்டும் நிறுத்தாதற்கு காரணம் தெரியவில்லை இந்த ரயிலில் 21 பெட்டிகள் உள்ளன முன்பதிவு முன்பதிவு இல்லாத பயணிகள் அதிகமாக செல்கின்றனர் வருவாய் அதிகமாக நடைபெறக்கூடிய ரயில் நிலையம் கார்மேலராம் அதனால் இந்த ரயிலை கார்மேலாராம் ரயில் நிலையத்தில் நிற்பதற்கு தகுந்த உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தென் மாவட்ட பயணிகள் பொது மக்கள் நாகர்கோவில் பெங்களூரு ரயிலை கார்மேலராம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்து தருமாறு பெங்களூர் மற்றும் தமிழ்நாடு வட தென் மாவட்ட மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
தண்டபாணி நிருபர்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









