கீழக்கரையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்க்கான பயிற்சி.!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் மன்றத்தின் நுடப (TNSCST) சார்பாக தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு என்ற தலைப்பில் ஆறு நாட்களில் இரண்டு கட்டங்களாக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வர் ஷேக்தாவூது தலைமை தாங்கி பேசுகையில் பயிற்சி முகாமின் முக்கியத்துவத்தையும், தொழில் துறையில்அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பயிற்சி முகாமின் மாணவர்கள் புதிய திறன்களைப் பெறும் அவசியத்தையும் பற்றி கூறினார். முன்னதாக இந்த பயிற்சி முகாமின் துவக்கவிழாவில் துணைமுதல்வர் வரவேற்று பேசினார்.

முதல் மூன்று நாள் பயிற்சியின் துவக்க விழாவில் SRI KVS இன்டஸ்டரீஸ், சென்னை தலைவரும், தொழிலதிபருமான Dr.VSV. வெர்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொழில் துறையில் பயன்படுத்தப்படும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களை அறிந்து கொள்ளுவதற்கும் தொழில் துறையில் வேலை பெறுவதற்கு மாணவர்கள் தங்களை தயார் செய்வதோடு மட்டுமல்லாமல் துறை சார்ந்த நுண்ணறிவினை மேம்படுத்திக் கொள்ளவும். சிறுதொழில் நிறுவனம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான நடைமுறை திட்டங்கள் பற்றியும் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை பயன்படுத்தி திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். மேலும், இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சிறப்பு விருந்தினர் இந்த 2025ஆம் ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் பாலிடெக்னிக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஏற்பாடுகள் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

முதல் கட்ட பயிற்சி முகாமில், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து அமைப்பியல், இயந்திரவியல் மற்றும் மெரைன் துறைகளின் இறுதியாண்டு மாணவர்கள் 150 பேர்கள் பங்குகொள்கிறார்கள். இந்த மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சியில் மாணவர்களுக்கு இளம்வயதில் தொழில் முனைவோர் ஆவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் முக்கிய பங்கினை பற்றியும் மற்றும் இலக்குகளை அடைதல், இலக்குகளை நிர்ணயித்தல் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், தொழில்துறை வாய்ப்புகளை உருவாக்குதல், வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துதல், ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ளுதல், வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்துதல், புதிதாக தொழில் தொடங்க வங்கி மூலம் நிதி பெறுதல், குழுவுடன் கலந்துரையாடல் மற்றும் இதர வேலை வாய்ப்புகளுக்கான திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்கள் இந்த மூன்று நாள் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோரின் ஆலோசனையின்படி அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!