இராமநாதபுரம், ஆக.24-
இராமநாதபுரம் வட்டார உழவர் மையத்தில் அட்மா திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் பேராவூர் ஊராட்சி கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், உழவன் செயலி செயல்பாடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மானிய விவரங்கள் குறித்து ராமநாதபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன் பேசினார்.
வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விவசாயிகள் அனைவரும் தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என ராமநாதபுரம் வேளாண் துணை இயக்குநர் (ம.தி) பாஸ்கரமணியன் கூறினார். விதை கடினப்படுத்துதல், பூஞ்சான கொல்லி மருந்து விதை நேர்த்தி, உயிர் உரங்கள் விதை நேர்த்தி முறைகள் கடைபிடிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பயிர்கள் சீராக வளர்வதுடன் வறட்சி தாங்கி வளரும் சக்தி அதிகரிக்கிறது என ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் பேரா. வள்ளல் கண்ணன் பேசினார். உர பரிந்துரை குறித்து ராமநாதரபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) செல்வம் கூறினார். மண் மாதிரி சேகரிப்பு, அதன் முக்கியத்துவம் குறித்து ராமநாதரபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு நாகராஜன் கூறினார். இயற்கை உரங்களின் நன்மைகள், பயன்பாடு, ஒவ்வொரு பயிருக்கும் எந்தெந்த உயிர் உர பயன்பாடு குறித்து ராமநாதபுரம் வட்டார வேளாண் அலுவலர் ந.தமிழ் கூறினார். தோட்டக்கலை துறை திட்டங்களின் மானிய விவரங்கள் குறித்து ராமநாதபுரம் வட்டார அலுவலர் மோகனா கூறினார். ராமநாதபுரம் வட்டார வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விதை நேர்த்தி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது ராமநாதபுரம் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேஸ்குமார் பாலாஜி ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.





You must be logged in to post a comment.