பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்.!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவை- நாகர்கோவில், நாகர்கோவில் – கோவை, -எக்ஸ்பிரஸ் ரெயில்கள், நாளை (1-ந்தேதி) மற்றும் 6, 8, 11, 13, 15 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.

மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (1-ந்தேதி) மற்றும் 9, 11, 15 ஆகிய தேதிகளில், திருச்சி, காரைக்குடி, விருதுநகர் வழியாக மாற்றுப் பாதையில் செல்வதால், திண்டுக்கல், மதுரை செல்லாது.

நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா ரெயில், நாளை (1-ந்தேதி) மற்றும் 8, 15 ஆகிய தேதிகளில், விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது.

குஜராத் -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 4, 11 ஆகிய தேதிகளில் மாற்றுப்பா தையில் இயக்கப்படுவதால், திண்டுக்கல், மதுரை செல்லாது.

மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 6, 13 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் செல்வதால், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.

நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.டி. ரெயில், வருகிற 11-ந்தேதி மட்டும் மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது.

குருவாயூர் – சென்னை எழும்பூர் இடையேயான இரவு 11.15 மணி ரெயில், வருகிற 10-ந்தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது.

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 9-ந்தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், திண்டுக்கல், மதுரை செல்லாது.

மதுரை – சென்னை எழும்பூர் தேஜஸ் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (1-ந்தேதி) மற்றும் 8, 11, 15 ஆகிய தேதிகளில், 45 நிமி டங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!