மாற்றுத்திறனாளிகளுக்கு தொந்தரவு இல்லாமல் ரயில் டிக்கட்- ஒரு வாரத்தில் நடவடிக்கை – மாற்றுத் திறனாளிகள் திடீர் போராட்டத்தையொட்டி உறுதி..

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டண டிக்கட் எடுக்க, பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிதான் நேரில் வர வேண்டும், மருத்துவர் தரும் சலுகை சான்றை ஏற்க மாட்டோம் – ரயில்வே கோட்ட அலுவலகங்களில் வழங்கப்படும் சலுகை சான்றைத்தான் வாங்கி வரவேண்டும் – இப்படி விதிகளுக்கு புறம்பாக ரயில்வே டிக்கட் மைய ஊழியர்கள் ஏதாவது காரணத்தை சொல்லி டிக்கட் வழங்கி மறுக்கும் போக்கு பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை மாம்பலம் முன் பதிவு மையத்தில் ஊழியர்கள் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை அழைக்கழித்ததால், கடந்த 12ம் தேதி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர். இனிமேல் தவறுகள் நடக்காது என ஊழியர்கள் வாக்குறுதி அளித்ததால் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், மீண்டும் ஊழியர்கள் விதிமுறைகளுக்கு மாறாக காரணம் சொல்லி டிக்கட் வழங்க மறுக்கத் துவங்கினர். இதனை கண்டிக்கும் வகையிலும், நிரந்தர தீர்வை வலியுறுத்தியும், அடாவடியாக செயல்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீண்டும் இன்று (21/07/2018) அந்த மையத்தில் மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் 3 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட வர்த்தக மேலாளர் நரேன் கூட்டு இயக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாற்று  திறனாளிகளுக்கு சலுகை கட்டண டிக்கட் வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊஊழியர்களுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பயிற்சிகள் அவ்வப்போது அளிக்காத்தே இப்படி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இன்னும் ஒரு வார காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் பேரா.டி.எம்.என். தீபக், பா. ராதாகிருஷ்ணன், என்.சாந்தி, எஸ்.கே. மாரியப்பன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!