சமீபத்தில் மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் சேலம் அருகே வரும் பொழுது சில பெட்டியகளில் 2 மர்ம நபர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்துள்ளர். இதை கண்ட பயணம் செய்த ஒரு பெண்மணி மர்ம நபர்களின் நடவடிக்கையை கவனிக்க உறங்குவது மறுபுறம் திரும்பி நோட்டமிட்டுள்ளார்.
அச்சமயம் அப்பெண்மணியின் அருகே உறங்கி கொண்டிருந்த அவர் மகனின் சட்டை காலரை உயர்த்தி தங்க ஆபரணம் ஏதும் அணிந்துள்ளாரா என்று பார்த்துள்ளனர், உடனே அருகில் இருந்த அப்பெண்மணி என்ன வேண்டும் என்று கேட்டவுடன் வேகமாக தப்பி ஓடியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் சேலத்திற்கு முன்பாகவே நடைபெறுகிறது, காரணம் அதை தாண்டி காவல்துறை பாதுகாப்பு கடுமையாக உள்ளது.
இது போன்ற அசம்பாவிதத்தை தடுக்க பாதுகாப்பை ஓசூரில் இருந்தே நீட்டித்து, துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பான பயணங்கள் கிடைக்கும் என சக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









