மதுரை – கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இன்று இரவு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர் பயணிகளை முழுவதுமாக இறக்கிவிட்டு ரயில் பெட்டிகளுடன் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க சென்றபோது கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டியை கழற்றி விட்டு மற்ற காலி பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி பின்னர் ரயில்வே துறையினர் பெட்டியை யார்ட் பகுதியிலிருந்து ரயில் பெட்டி பராமரிப்பு பகுதிக்கு எடுத்துசென்றனர்.
தொடர்ந்து இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மதுரையில் சில தினங்களுக்கு முன்பு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது ரயில் பெட்டி திடீரென தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
தற்போது ரயில் பெட்டி தடம் புரண்ட பகுதி என்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









