ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயல் மோதி ஆடுகள் மற்றும் ஒரு நபர் பலி…

நிலக்கோட்டை அருகே ஆடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் 8 ஆடுகள்  மற்றும் உரிமையாளரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சந்தியா நகரைச் சேர்ந்த பெருமாள் வயது 54 இவர் ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய பேரனுக்கு திருமணம் நடைபெற இருப்பதையொட்டி தான் வளர்க்கும்  ஆடுகளை வட மதுரையில் இருந்து நிலக்கோட்டை அருகே மெட்டூரில் உள்ள தனது மகன் பொன் வேல் வீட்டில் விட சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வட மதுரையில் இருந்து திண்டுக்கல் மதுரை நான்குவழி சாலைகள் வழியாக மேட்டூருக்கு மேய்த்தபடி பெருமாளும் அவரிடம் வேலை பார்க்கும் அழகரும் என்பவரும் வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை கொடைரோடு அருகே மெட்டூர் ரயில் தண்டவாளத்தை ஆடுகளுடன் அவர்கள் கடக்க முயன்றபோது, கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் மோதி 8 ஆடுகள் மற்றும் பெருமாளும் உடல் சிதறி  இறந்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!