கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை அன்று (ஜனவரி 9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் (16848), நாகர்கோவில் – மும்பை ரயில் (16352), மதுரை – பிகானிர் ரயில் (22631), நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர ரயில் (16321), குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் (16128), கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர ரயில் (16322), ஓகா – ராமேஸ்வரம் ரயில் (16734), மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் (16847), திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில்கள் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களிலும் மற்ற ரயில்கள் மானாமதுரை ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.
*ரயில்கள் பகுதியாக ரத்து*
ஜனவரி 6 அன்று குஜராத் ஓகாவில் இருந்து புறப்படும் மதுரை ரயில் (09520) விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் ஜனவரி 10 அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ஓகா ரயில் (09519) மதுரை – விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9 அன்று பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு ரயில்கள் (16731/ 16732) திண்டுக்கல் – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
You must be logged in to post a comment.