ராமேஸ்வரம் அருகே சட்ட விரோதமான மதுபாட்டில் கடத்தல் ! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தனியார் பயணிகள் பேருந்துகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்த போது அதிலிருந்து 144 மதுபான பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது குற்ற செயலில் ஈடுபட்ட சிவகங்கையை சார்ந்த வாகன ஓட்டுநர் சக்தி என்பவர் கைது செய்து பேருந்தும் கைப்பற்றப்பட்டது. மேலும் இதுபோன்று மாவட்டதில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபாட்டில்கள் / பாக்கெட்டுகள் கடத்தி வரும் நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் IPS எச்சரித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!