இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் சுற்றிலும் எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் நெரிசலான பகுதியாக விளங்குகிறது இந்நிலையில் வழிவிடு முருகன் கோயிலை கடக்கும் வழியில் மிக ஆபத்தான வளைவு உள்ளது. வளைவில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த (தனியார் நிறுவன விளம்பரங்களுடன்) கூண்டு சம்பிரதாயத்திற்கா வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இக்கூண்டு காட்சி பொருளாக, வாகனங்கள், பாதசாரீகளுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது.
இப்பகுதியில் அரங்கேறும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க அமைக்கப்பட்ட இந்த கண்காணிப்பு கேமராவாரல் எவ்வித பயனுமில்லை. இந்த வளைவில் நேற்று இரவு வேகமாக கடந்த அரசு பேருந்து முதியவர் மீது மோதியதில் படு காயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். காட்சி பொருளாக இக்கூண்டு ஒரு புறம் இருந்தாலும், அது வழி செல்லும் பாதசாரீகளை கருத்தில் கொண்டு அப்பகுதியை கடக்கும் வாகனங்கள் வேகம் குறைத்து செல்ல வேண்டும். அப்பகுதியில் விபரீதம் உணர்ந்து, இடையூறாக உள்ள இக்கூண்டு அகற்ற வேண்டும், அல்லது போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












