வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் வத்தலகுண்டு பொதுமக்கள் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு ..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் வத்தலகுண்டு இப்பகுதியானது திண்டுக்கல் மற்றும் மதுரைலிருந்து தேனி, பெரியகுளம், குமுளி, கேரளமாநிலம் போன்ற பகுதிகளுக்கும் அதேபோல் உலக சுற்றுலாத் தலமான மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கும் செல்வதற்கு வத்தலகுண்டு சென்று தான் செல்ல வேண்டும்.

அதேபோல் வத்தலகுண்டு பகுதியில் தான் அதிகமாக விவசாயம் நடைபெறுகிறது குறிப்பாக வாழை, வெற்றிலை, தென்னை போன்றவைகளில் விவசாயம் செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட வத்தலகுண்டு பகுதியில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால் வத்தலகுண்டு டவுன் பகுதியில் சுமார் 1.5 கிலோ மீட்டர் சாலையை கடப்பதற்கு சுமார் 1.மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு புறவழிச் சாலை அமைக்கப்பட்டு அப்பகுதியில் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது

ஆனால் பேருந்துகளில் வருபவர்களும் விவசாயப் பொருட்கள் வாங்க வருபவர்களும் கண்டிப்பாக நகர்ப் பகுதிக்குள் வந்து தான் செல்ல வேண்டும். வத்தலகுண்டு நெடுஞ்சாலை சுமார் 100 அடி சாலையா இருந்தது, தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக 20 முதல் 30 அடி ரோடு ஆக உள்ளது. அது மட்டுமில்லாமல் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானல் மற்றும் கம்பம், குமுளி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நகரப்பகுதிகளில் உள்ளே வருகின்றனர்.

இது காலை முதல் இரவு வரை தொடர்ந்து வாகன நெரிசல் உள்ளது. வாகன நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் பேருந்து நிலையத்தை வெளி பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போது வத்தலகுண்டு பேரூராட்சி மக்கள் தொகை அதிகமாக உள்ளது. பல்வேறுபட்ட மக்களும் வத்தலகுண்டு வந்து தான் செல்ல வேண்டி இருக்கும் சூழ்நிலையில் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் ஊருக்கு வெளியில் கொண்டுவர வேண்டும், அதேபோல் வாகன நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் வத்தலகுண்டில் நிரந்தரமாக போக்குவரத்து காவலர்களை நியமித்து தொடர்ந்து கண்காணித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது…

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!