செம்பட்டியில் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் முருகபக்தர்களும் மற்ற வாகனஓட்டிகளும் அவதி..

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் நடைபயணமாக முருகனை தரிசிக்கத் செல்லும் பக்தர்களும் மற்ற வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகும் நிலை உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முருக பக்தர்களின் நலன்கருதி மாவட்ட எல்லை பகுதிகளில் இருந்து பழனிமலை முருகன் சன்னிதானம் வரை பக்தர்களுக்காக சிறந்த ஏற்பாடுகள் செய்துள்ள போதிலும் செம்பட்டி பகுதியில் இதுபோன்ற நிலையினால் நடைபயணம் செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகும் நிலைஉள்ளது.

ஆகையால், சாலையின் இருபக்கமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி பக்தர்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் வழிஏற்படுத்தி தந்து உதவுடுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!