இராமநாதபுரம் :வணிக நிறுவனங்கள் செலுத்தும் கடை வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், உள்ளாட்சி சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு 10.10.2024 முதல் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உள்ளாட்சிகளுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரியை கடைகளுக்கு 100% வரை 2022-2023 காலத்தில் உயர்த்திய தமிழக அரசு தற்பொழுது ஆண்டுக்கு ஆண்டு 6% உயர்த்தி உள்ளது, தாமதமாக செலுத்தும் சொத்து வரி மீது ஒவ்வொரு மாதத்திற்கும் 1% வீதம் அபராதம் விதித்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் குப்பை வரி, தொழில் வரி வசூல் செய்யும் நிலையில் புதியதாக நிறுவன உரிமம் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். வரி விதிப்பு, வரி உயர்வு உரிமக்கட்டணம் விதிப்பு உள்ளிட்டவைகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோளுக்கு இணங்க ராமநாதபுரத்தில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வர்த்தகர்கள் சங்கம், மளிகை வியாபாரிகள் சங்கம், தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம், ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், ஜவுளி மற்றும் ரெடிமேடு வியாபாரிகள் சங்கம், மிளகாய் மற்றும் நவதானிய வியாபாரிகள் சங்கம், அச்சி வியாபாரிகள் சங்கம், நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம், காய்கனி வியாபாரிகள் சங்கத்தின் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.