ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் கண்மாய் கரையில் இருந்து கவிழ்ந்து 8 பேர் படுகாயம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் கண்மாய் கரையில் இருந்து கவிழ்ந்து விழுந்து விபத்து. டிராக்டரில் அமைந்திருந்த 8 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் கூமாப்பட்டியில் சொந்தமாக தென்னந்தோப்பு வைத்துள்ளார். இவர் இன்று (12/07/2020) காலை தனது தோப்பில் தேங்காய் வெட்டி விட்டு தன் சொந்த டிராக்டரில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு குணவந்தனேரி கண்மாய் கரையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக டிராக்டர் கவிழ்ந்து கண்மாய்க்குள் விழுந்தது.

இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படனர். பின்னர் இலங்கேஸ்வரி, பாண்டி லட்சுமி என 2 பேர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கூமாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!