செங்குன்றம் 10வதுதெருவில் நடுரோட்டில் படம் எடுத்து நின்ற நல்ல பாம்பு. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்.

செங்குன்றம் பத்தாவது தெருவில் வசிப்பவர் கார்த்திக் நேற்று இரவு இவரது வீட்டிற்கு பால் ஊத்த வந்த நபர் இவரது வீட்டில் அருகில் வரும்போது சாலையின் நடுவில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.உடனே வீட்டிலிருந்து வெளியே வந்த கார்த்திக் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சினேக் பாபு படம் எடுத்து நின்ற நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் விடுவித்தார்.மேலும் இது பொறி நல்ல பாம்பு என்றும் குளிர்காலத்தில் வெப்பத்திற்காக தார் சாலைகளில் வரும் என்றும் இவை கோழிகள் கோழி முட்டைகளை அதிகம் உண்ணக்கூடிய வகை என்று பாம்பு பிடி வீரர் ஸ்நேகா பாபு தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!