தேசியக்கொடியை பேரவையின் தலைவர் சகோ.சஹாபுதீன் ஏற்றினார்கள்.தேசிய கீதம் இசைக்கப்பட்டு,பின்னர் து.செயலாளர்களில் ஒருவரான சகோ.இர்ஷாத் உறுதிமொழி கூற அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். செயலாளர் சகோ.லெஸின் சுதந்திர தினத்தின் மாண்புகளையும் உயிர் நீத்த தியாகிகள் பற்றியும் பேசினார்.மேலும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக சகோ. அப்துர் ரஹ்மான் நினைவு பரிசுவழங்கி கவுரவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பெரியவர்கள் என திரளானோர் முகக்கவசத்துடன் கலந்துகொண்டனர்.சமூக இடைவெளியுடன் சுதந்திர தினத்தை உணர்ச்சி பெருக்குடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.கொரோனா வைரஸ் தடுப்பு போராட்டத்தில் அர்ப்பணிப்பு பணியோடு சேவைகளை செய்துவரும் அனைவருக்கும் இந்த நன்னாளில் பேரவையின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் அனைத்து சமூக மக்களும் திரளாக கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.