கீழக்கரையில் மீண்டும் பழைய பஸ் நிலையம் வரை பஸ்கள் வரத்தொடங்கின..

கீழக்கரையில் கடந்த பல மாதங்களாக பழைய பஸ் நிலையத்திற்கு புறநகர் போக்குவரத்து இல்லாமல் பொது மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக கீழக்கரையில் உள்ள பலதரப்பட்ட சமூக அமைப்புகளும், ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.

கீழக்கரை கடற்கரை வரை வந்து செல்லும் 1NO பஸ் 25.01.2017 முதல் வரத்தொடங்கி விட்டது. பொதுக்கள் இனி கடற்கரை பழையபஸ்டாண்டில் இருந்து இராமநாதபுரம் வரை சிரமம் இல்லாமல் செல்லலாம் .

சமீபத்தில் இது சம்பந்தமாக இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மற்றும் கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப்போராளிகள் சார்பாகவும் மாவட்ட ஆட்சியருக்கு குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டது.

புறநகர் பேருந்துகள் கீழக்கரை பழைய பேருந்து நிலையம் வரை வர முயற்சி செய்த சமூக ஆர்வலர்களுக்கும்,சமூக அமைப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!