ஒகனேக்கல் நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து குறைவு… சுற்றுலா பயணிகள் வருகை பாதிப்பு…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்திபெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று. இங்கு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஐவர் பாணி, சிறுவர் பூங்கா, மெயின் அருவி,  முதலை பண்ணை, தொங்கு பாலம், படகு சவாரி போன்ற இடங்கள் உள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் குடகு மலையில் அதிக அளவில் மழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணை களும் நிரம்பியது. அவை நிரம்பியதால் அணைகளின் நலனை கருதி காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது கர்நாடகாவில் கடந்த மூன்று மாதங்களாக முற்றிலும் மழை நின்றுவிட்டதால் காவிரி ஆற்றில் படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்து நேற்று மாலை ஒகேனக்கல் பிலிகுண்டு நிலவரப்படி 800கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால்  சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தே காணப்படுகிறது. மேலும் ஆங்கில புத்தாண்டிற்கு இன்னும் ஒரேநாள் இருப்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: ஶ்ரீதரன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!