கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு சவாரி செய்ய சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.
விடுமுறை காலம் என்பதாலும் இன்று (04/05/2019) முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். மேலும் சிறப்பு வழி என அறிவித்து ரூபாய் 200 வசூலில் செய்யப்படுகிறது, ஆனால் அதற்கான பிரத்யேக சிறப்பு ஏ
ற்பாடுகள் எதுவுமில்லை என்பது பொது மக்களின் புகார். ஆகையால் நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.