தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் 13.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் தென்காசி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மாவட்டமாகும். இங்கு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், இலஞ்சி குமாரர் கோவில், பண்பொழி திருமலைக்கோவில், அச்சன்கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களும், குற்றால அருவி, பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி போன்ற அருவிகளும் நிறைந்து காணப்படும் மாவட்டமாகும். 

அதன்படி தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம் தர்மாபுரம் மடம் கிராமத்தில் அமைந்துள்ள கடனாநதி அணை ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிக்கு பிரதான குடிநீர் அமைப்பாக இருந்து வருகிறது. கடனாநதி அணை பூங்காவினை பார்வையிட வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிதாக பூங்காவின் நுழைவுச் சீட்டு வளாகம் அமைத்தல், வாகனம் நிறுத்தும் இடம், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லவும் வெளியேற்றும் பாதையை அகலப்படுத்துதல், உணவுக் கூடங்களை மேம்படுத்துதல், குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள், இசை நீரூற்றுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகனம் மற்றும் குப்பைகளை மறு சுழற்சி ஏற்பாடுகள் போன்றவைகளை மேம்படுத்துவது குறித்தும்,

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு வெளி மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிவதால் அனைவரும் தங்குவதற்கு ஏதுவாக, தங்கும் விடுதி, கழிப்பிடம் மற்றும் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்தும், குற்றாலத்தில் சீசன் காலங்களில் அனைத்து ஊர்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் மக்கள் வருகை புரிந்து குற்றாலச் சாரலினை அனுபவித்துச் செல்வர். இங்கு சுற்றுலாத்துறை சார்பாக சாரல் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாட்களிலும் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்து செல்வர். எனவே குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், மேலும், கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பெரியகுளத்தில் புதிதாக படகு குழாம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என சுற்றுலாத்துறை துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, சுரண்டை நகர்மன்ற உறுப்பினர் வே.ஜெயபாலன், செயற்பொறியாளர் (சிற்றாறு வடிநிலக்கோட்டம்) தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், உதவிப் பொறியாளர் உமாபதி, கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், சுற்றுலா அலுவலர் சீனிவாசன், குற்றாலம் செயல் அலுலர் சுஷ்மா, தென்காசி வட்டாட்சியர் ராம்குமார், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!