ஆதரவற்றோர் காப்பக மாணவிகள் கல்வி சுற்றுலா..

இராமநாதபுரம், செப்.30 – இராமநாதபுரம் சுற்றுலாத்துறை சார்பில் அரசு அன்னை சத்யா காப்பக மாணவியருக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். 

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். ஆதரவற்ற குழந்தைகள் காப்பக குழந்தைகளுக்கு பொது அறிவு, அறிவியல். வரலாற்று சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு பெற சுற்றுலா துறை சார்பில்  ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா  அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் மனசோர்வுகளிலிருந்து விடுபடவும், புத்துணர்ச்சியுடன் படிக்கும் வகையிலும் வரலாற்று சிறப்புகளை நேரடியாக பார்த்து பயன்பெறும் வகையில் அரசே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு காலாண்டு விடுமுறையையொட்டி மாணவிகளுக்கான சுற்றுலா பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் அரசு அன்னை சத்யா காப்பக 40 மாணவிகள் பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் மன்னர்கள் வசித்த அரண்மனை, கீழடி அருங்காட்சியத்திற்கு சென்று தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்புகளை பார்வையிட்டனர். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், சுற்றுலாத்துறை அலுவலர் அருண் பிரசாத், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் புல்லாணி, ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!