25-26 சட்டமன்ற அறிவிப்பு எண் 41 ன் படி தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி திறப்பு..
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள திருக்கோயில்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெற்று கீழ்க்கண்ட 10 திருக்கோவில்களில் அமைக்கப்படும்
என்ற அறிவிப்பின்படி 10 திருக்கோவில்களில் தொடுதிரை தகவல்பெட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதன் பிறகு அனைத்து திருக்கோயில்களிலும் தொடுதிரை வசதியை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி நகர் மன்ற உறுப்பினர் தீனதயாளன் பொறியாளர்கள் முத்துராஜ், குமார், பார்த்திபன், ஸ்ரீதரன் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

