தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில் புகழ்பெற்ற தக்காளி சந்தை செயல்பட்டு வருகிறது.பாலக்கோடு சந்தைக்கு பாலக்கோடு பென்னாகரம் மாரண்டஅள்ளி காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக கடும் வரட்சி நிலவி வருகிறது இதனால் விவசாய நிலங்கள் காடாக மாறிவிட்டது.ஒருசில விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது பனி பொழிவு அதிகமாக உள்ள காரணத்தால் தக்காளி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு சந்தைக்கு தினமும் 100 டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் கடந்த சில தினங்களாக வரத்து 10டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது சென்ற வாரம் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து தேனி திண்டுக்கல் ஈரோடு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். விலை உயர்வு வரத்து குறைவு காரணமாக ஏராளமான மொத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.தற்போது மார்கழி மாதம் பண்டிகை எதுவும் இல்லாத காரணத்தாலும் தக்காளியின் தேவை குறைவு காரணமாகவும் 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை திருமண விழாக்கள் அதிகமுள்ள காலங்கள் நெருங்கி வருவதால் தக்காளி விலை மேலும் கடுமையாக உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தக்காளி விலை உயர்வால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி



You must be logged in to post a comment.