கடந்த வாரம் முதல் அனைத்து முன்னனி ஊடகங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்ப போகிறது அதுவே 73 சதவீத மக்களின் விருப்பமாக உள்ளது என ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்து போல் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்திய பெருநாடு என்பது 1.324 பில்லியன் மக்கள் தொகையுடன் 29 மாநிலம் மற்றும் 7 யுனியன் பிரதேசத்துடன் 22 அதிகாரபூர்வமான மொழிகளை உள்ளடக்கியது. ஆனால் இந்த கருத்துக் கணிப்போ 9 மொழிகள் பேசக்கூடிய வட மாநிலங்களில் அதுவும் இன்டெர்ன்ட் வசதி உடைய மொத்தம் 8.4 லட்சம் மக்களிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த இந்திய மக்கள் தொகையில் 1% சதவீதம் கூட கிடையாது என்பதை மறைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள். “’PULSE OF NATION’ “ என்ற பெயரில கருத்துக் கணிப்பை ஒட்டு மொத்த நாட்டின் கருத்தாக ஒளிபரப்பி வருகின்றனர் இந்த ஊடகங்கள். அதிலும் நம் தமிழ் தொலைக்காட்சிகளான NEWS7 போன்றவைகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப செய்து தங்களுடைய எஜமானர் விசுவாசத்தை தெளிவாக காட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் கோப்ரா எனும் பத்திரிக்கை, 136 பத்திரிக்கைகளின் காசுக்கு விலைபோன வண்டவாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதும், இது போன்ற போலித்தனமான கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவதும் ஊடகத்தின் பித்தலாட்டத்தை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இந்த போலியான கருத்துக் கணிப்பில் கூட மோடி அரசால் மிகவும் தோல்வியடைந்த திட்டம் வேலைவாய்ப்பு தான் என்பதை மக்கள் கருத்தாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதை மக்கள் மத்தியில் காட்டாமல் தங்களுக்கு சாதமாக மறைத்துள்ளார்கள். இடைத் தேர்தல்களும் 2019ம் ஆண்டில் வர இருக்கும் பொதுத் தேர்தலையும் கருத்தில் கொண்டு இப்பொழுதே ஆளும் வர்க்கம் ஊடகங்களை விலைபேச ஆரம்பித்து விட்டர்கள் என்பது தெளிவாகிறது. பொதுமக்கள் இந்த சதி வலைக்குள் சிக்கி விடாமல் நாட்டின் நலன் கருதி சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











