திருவாடானை பகுதியில் சற்று முன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று காலை திடீரென அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த நிலப்பரப்பு குளிர்ச்சி அடைந்ததுடன், வெப்பத்தின் தாக்கமும் சற்று குறைந்தது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை வரவேற்றனர்.
இதேபோன்று, நேற்று நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 5 மணி வரை கடலாடி தாலுகா சாயல்குடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
You must be logged in to post a comment.