இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை..! தொகுப்பு “வளர்பிறை”

மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு: இன்று மாலை 6 மணி முதல் அமல்.

கொரோனா பரவல் எதிரொலி: மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை

லடாக் மோதல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை இந்தியா சீனா இடையே 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

புதுச்சேரியில் சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் ஓட்டல் ஊழியர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்களில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு!

வளிமண்டல சுழற்சியால் தென் தமிழகத்தில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்:

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
-வானிலை ஆய்வு மையம்!

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: முதல் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதல்

பெட்ரோல், டீசல் விலை…

சென்னையில் இன்று விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.92.58-க்கும். டீசல் ஒரு லிட்டர் ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்தி தொகுப்பு;வளர்பிறை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!