தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,84029-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,84028-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,52027-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,04026-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-30-04-2025- ஒரு கிராம் ரூ.11129-04-2025- ஒரு கிராம் ரூ.11128-04-2025- ஒரு கிராம் ரூ.11127-04-2025- ஒரு கிராம் ரூ.11226-04-2025- ஒரு கிராம் ரூ.112
