காலையில் இறங்கி மாலையில் எகிறிய தங்கம்!

தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனையான நிலையில், நேற்று காலை மற்றும் பிற்பகல் 2 வேளைகளில் விலை உயர்ந்து இருந்தது.காலையில் சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை தாண்டியது.இதனையடுத்து இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.இந்நிலையில் மாலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11, 300-க்கும், சவரன் 1600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,400-க்கும் விற்பனையாகிறது.தங்கம் விலை ஏறுமா, இறங்குமா, தங்கம் வாங்கலாமா வேண்டாமா என நடுத்தர மக்களை இந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,60028-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,60027-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,60026-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,00025-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-29-10-2025- ஒரு கிராம் ரூ.16628-10-2025- ஒரு கிராம் ரூ.16527-10-2025- ஒரு கிராம் ரூ.17026-10-2025- ஒரு கிராம் ரூ.17025-10-2025- ஒரு கிராம் ரூ.170

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!