ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,400-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,04005-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,96004-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,36003-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,32002-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-06-08-2025- ஒரு கிராம் ரூ.12605-08-2025- ஒரு கிராம் ரூ.12504-08-2025- ஒரு கிராம் ரூ.12303-08-2025- ஒரு கிராம் ரூ.12302-08-2025- ஒரு கிராம் ரூ.123

You must be logged in to post a comment.