கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வரும் சூழலில், நேற்று போல் இன்றும் மீண்டும் சற்று அதிகரித்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக அவ்வப்போது உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கடந்த ஜூன் 14-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320-க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையாகி சாதனை படைத்தது.
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என்றும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.
Gold Rate: இந்த நிலையில், தங்கம் விலை நேற்றை போல் இன்றும் ஏற்றம் கண்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 21) சவரனுக்கு ரூ.ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 105 அதிகரித்து ரூ.9,285-க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 10,129 -க்கும், ஒரு சவரன் ரூ. 81,032-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,650-க்கும், ஒரு சவரன் ரூ. 61,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 128 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,28,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









