தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,12020-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,56019-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,56018-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,56017-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-21-04-2025- ஒரு கிராம் ரூ.11120-04-2025- ஒரு கிராம் ரூ.11019-04-2025- ஒரு கிராம் ரூ.11018-04-2025- ஒரு கிராம் ரூ.11017-04-2025- ஒரு கிராம் ரூ.110
