தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.அந்த வகையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்துக்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.இந்த நிலையில் ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 100-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் 800 ரூபாய்க்கும்விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை 1680 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 31 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 285 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,12025-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,56024-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,40023-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,16022-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-26-12-2025- ஒரு கிராம் ரூ.25425-12-2025- ஒரு கிராம் ரூ.24524-12-2025- ஒரு கிராம் ரூ.24423-12-2025- ஒரு கிராம் ரூ.23422-12-2025- ஒரு கிராம் ரூ.231

