இன்று (நவ.,25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் கடந்த ஒரு மாதமாக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 11,630 ரூபாய்க்கும், சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையே இருந்தது.
நேற்று (நவ.,25) தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 11,520 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 880 ரூபாய் சரிவடைந்து, 92,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 171 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (நவ.,25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


You must be logged in to post a comment.