தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17-ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை ‘கிடுகிடு’வென ஏறி வருகிறது.கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதன் பின்னர் விலை அதிகரித்து 19-ந்தேதி ரூ.56 ஆயிரத்தையும், 21-ந்தேதி ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்று முன்தினமும் அதிகரித்தது.நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 300-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 920 உயர்ந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்துள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,40023-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,40022-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,80021-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,16020-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920 கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-24-11-2024- ஒரு கிராம் ரூ. 10123-11-2024- ஒரு கிராம் ரூ. 10122-11-2024- ஒரு கிராம் ரூ. 10121-11-2024- ஒரு கிராம் ரூ. 10120-11-2024- ஒரு கிராம் ரூ. 101

You must be logged in to post a comment.