மளமளவென ஏறி வரும் தங்கம் விலை! பரிதவிக்கும் மக்கள்..

 இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ,நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,850 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 75 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 89க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.54,000-ஐ தாண்டியுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்குமோ என்ற கவலை மக்களிடையே நிலவி வருகிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!