சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கு விற்பனையாகிறது. தங்கதைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரமும் பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

You must be logged in to post a comment.