இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.
மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக பிப் 1 ஆம் தேதி காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை மாலை ரூ. 360 அதிகரித்தது. அதன் பிறகு இன்று மீண்டும் சவரன் ரூ.64,500 ஐ கடந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,858-க்கும், ஒரு சவரன் ரூ. 70,864-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
You must be logged in to post a comment.