இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-1. வேளாண் விளைபொருட்களுக்கு தகுந்த 100 மதிப்புக்கூட்டு மையங்கள அமைத்திட ரூ.50 கோடி மானியம்.2. 56 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை ரூ.39.20 கோடி செலவில் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (e-NAM) ஒருங்கிணைக்கப்படும்3.உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்கே எடுத்துச் சென்று வழங்கிட 20 உழவர் சந்தைகளை உள்ளூர் இணைய வர்த்தகத்தளத்துடன் இணைக்கப்படும்.4.5 வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவப் புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.5. இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 53 நீர்வடிப்பகுதிகளில் இயற்கை வள மேம்பாட்டு பணிகள், தோட்டக்கலைப் பயிர்கள், வேளாண்காடுகள் அமைக்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு.6. வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ரூ.1 கோடி.7. கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு.8.உழவர்களின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு ரூ.3000 கோடி மூதலனக் கடன்.9. டெல்டா மாவட்டங்களில் 22 நெல் சேமிப்பு வளாகங்கள் அமைக்க ரூ.480 கோடி நிதி ஒதுக்கீடு.10. காவிரி டெல்டா பகுதிகளில் 6179.6 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு.11.ஊரகப்பகுதியிலுள்ள ஏழை மகளிருக்கு நாட்டுக்கு கோழிப்பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.12. மாட்டுச் சாணம் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு.13.5000 சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைத்திட 4% வட்டி மானியம் வழங்கப்படும்.14.10 ஆயிரம் மீனவர், மீனவ உழவர்களுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படும். 15. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 100 பயறுவிதை உற்பத்தித் தொகுப்புகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு, 30 நிலக்கடலை உற்பத்தித் தொகுப்புகள் அமைத்திட ரூ.4.5 கோடி நிதி.16. உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக ரூ.8,186 கோடி நிதி ஒதுக்கீடு.வேளாண் துறைக்கு ரூ.45,661.4485 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.