பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை ஆசிரியர் சையது ஆப்தீன் வாழ்த்து..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு வாழ்த்து கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவச் செல்வங்களே பதற்றமின்றி நம்பிக்கையோடு மன மகிழ்ச்சியுடனும் மன தைரியத்துடனும் தேர்வை எழுதுங்கள். வினாத்தாளைப் முழுமையாக படித்து தேர்வை எதிர்கொள்ளுங்கள்! உங்கள் மீதான முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

தேர்வு எழுதும் அணைத்து மாணவ மாணவிகளுக்கும் கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!