தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகமெங்கும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் வீரியமாக செயல்பட்டு வருவது அறிந்ததே. கீழக்கரையிலும் பல கிழைகள் அமைத்து பல பணிகள் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு அடையாள நிற வண்ணம் அடிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.




சமீபத்தில் முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை புதிதாக போடப்பட்ட சாலைகள் முறையாக போடப்படாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட காரணமாகி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய மக்கள் டீம் சார்பாக போராட்டம் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல் இஸ்லாமிய கல்விச் சங்கம், மக்கள் நல பாதுகாப்பு இயக்கம், சட்டப்போராளிகள் குழுமம் மற்றும் பல சமூக அமைப்புகள் ஆகியவை அரசு அதிகாரிகளுக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய மனுக்கள் செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாகும். ஆனால் அரசை மட்டுமே சார்ந்து இருக்காமல் மக்கள் பிரச்சினையை தீர்க்க உடனடியாக களம் இறங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி பாராட்டுக்குரியதாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Masha Allah