மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு  கிளை சார்பாக சில மாதங்களுக்கு முன்பாக பல இடங்களில்  மரங்கள் நட்டு அதனை பராமரித்தும் வந்தனர். அதனை நம் கீழை நியூஸ் இணைய தளத்திலும் “பசுமை புரட்சியில் தவ்ஹீத் ஜமாத்” என செய்தியும் வெளியிட்டு இருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக புது இடங்களில் மரங்கள் மீண்டும் மரங்கள் நடப்பட்டது. அதே போல் ஏற்கனவே வைத்த மரங்களை சரியான வளர்ச்சியை கண்காணித்து, சரி வர வளர்ச்சி இல்லாத மரங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆக்ஸிஜன் விற்பனைக்கு வந்துள்ள சூழலில் இது போன்ற பசுமையை காக்கும் வண்ணம் மரங்கள் வளர்த்து பராமரிப்பது மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!