விபத்தை தடுக்க தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி..

இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ECR ரோட்டில் இரவு நேரங்களில் தண்ணீர் பிடித்து வரும் பெண்கள் மீது அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்து ஏற்ப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஓடைக்குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர்கள் ECR ரோட்டில் தண்ணீர் பிடித்துவந்தபோது வயது முதிர்ந்த பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பெண்கள் பலியான சம்பவமும் நடந்தேறியுள்ளது.

இத்தகைய விபத்துகளுக்கு முக்கிய காரணம் இரவு நேரங்களில் தண்ணீர் பிடித்துவரும் தள்ளுவண்டிகள் மற்றும் நபர்கள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை.எனவேஇதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்குகிளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டரணினர் 7.7.2018 மற்றும் 8-7-18 ஆகிய இரண்டு நாட்களில் தில்லையேந்தல், பொக்கனேந்தல், திருப்புலாணி ஆகிய பகுதிகளில் தண்ணீர் குடங்களை எடுத்துவரும் நூற்றுக்கும்மேற்பட்ட தள்ளு வண்டிகளில் இருளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!