இராமநாதபுரம், ஆக.5 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் சந்தை திடலில் ஜனநாயக பாதுகாப்பு பொதுக்கூட்டம் இன்றிரவு நடந்தது. மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் மீரான், உஸ்மான், சித்திக் முன்னிலை வகித்தனர். இந்திய நாடும் முஸ்லிம்களும் குறித்து மாநில செயலாளர் அன்சாரி, பொதுசிவில் சட்டம் பாதிப்பு யாருக்கு? என மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் பேசினர். தீர்மானங்களை மாவட்ட செயலாளர் தினாஜ்கான் வாசித்தார்.

ஜெய்பூர் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பயண துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும், மணிப்பூரில் வன்முறையால் பாதித்தோருக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்திய இறையாண்மை, தேச ஒருமைப்பாட்டிற்கு எதிராக அமைந்துள்ள பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், ஹரியானா கலவரம், வன்முறைக்கு காரணமானோரை கடுமையாக தண்டிக்க வேண்டும், தமிழக சிறை வாசிகள் மீது காட்டப்படும் வேற்றுமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், ஆதிநாதன் ஆணைய அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும், இஸ்லாமிய பல கோடி மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்ற இஸ்லாமிய சமூகம் தன்னளவில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள். பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் ரஜப்தீன் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.