தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (தெற்கு) இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில், மாவட்டச்செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச்செயலாளர் உஸ்மான் மற்றும் ஃபாரூக் ஆகியோர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இராமநாதபுரம் அலுவலக தலைமை அதிகாரி தினேஷிடம் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை மிகவும் சேதமடைந்த சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும் புகார் கடிதம் வழங்கினர். இச்சாலை தற்போது பெரும் பள்ளம், உடைப்பு ஏற்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு வேளையில் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டத் தலைவர், கூறுகையில், “நாங்கள் இப்பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறோம். டிச.21,22 ல், இச்சாலையில் 7 விபத்துகள் நடந்துள்ளன. இச்சாலை பராமரிப்பு பணிகள் உடனே செய்ய வேண்டும் என்றார்.
You must be logged in to post a comment.