கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்…

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை மற்றும் இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய  இலவச கண் சிகிச்சை முகாம் 13-7-19 அன்று இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் 329 பயனாளிகள் பயனடைந்தனர். 26 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அன்று மாலை 3.30 மணியளவில் மதுரை அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு ரத்த சக்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை கண் அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக தெற்கு கிளைத்தலைவர் ஆலிம் ஹுசைன் நன்றியுரை வழங்கினார்.,

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!