இரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்..

இராமநாதபுரத்தில் உள்ள இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை கடந்த  5 மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக 123 நபர்கள் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நற்பணி செயல் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.

இது சம்பந்தமாக தவ்ஹீத்   ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் இரத்த தான பொறுப்பாளர் நசுருதீன் அவர்களிடம் கேட்ட பொழுது இதற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக என்று கூறி முடித்துக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அவர்களின் கிளைகள் மூலமாக இரத்த தான சேவை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருவது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!