நோய்களும், சிக்கலும் பெருகி வரும் அவசர உலகில் அவசரத் தேவை என்பது எந்த சூழலிலும் உருவாகும் என்ற நிலையே உள்ளது. அதற்கான தற்காப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். கீழக்கரையில் பல அமைப்புகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் ஒரே நோக்கத்தில் ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் நோய்வாய்ப்பட்ட நபர்களை முழுமையான மருத்துவ உதவியுடன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதுபோன்ற கால கட்டங்களில் தனியார் மருத்துவமனைகளை நாடி, ஏழை எளிய மக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளையின் சார்பாக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்குவது என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் வாங்க இருக்கும் ஆம்புலன்சில் இருக்க கூடிய வசதிகள் என்ன ?
பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக இந்த ஆம்புலன்ஸ் வாங்கப்படுகிறது.
உதாரணமாக ICU ( Intensive care Unit – அவசர சிகிச்சை பிரிவு & NICU (NeoNatal Intensive Care Unit – பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை) பிரிவில் என்ன வசதி இருக்குமோ அனைத்து வசதியும் இந்த ஆம்புலன்ஸில் இருக்கும்.
குழந்தைகளுக்கு தேவையான இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
செவிலியர் சிகிச்சையுடன் கூடிய பயணம் செய்வதற்க்கு ஏதுவாக பெரிய வாகனம் வாங்க உள்ளதால் அதிகமான தூரத்திற்கு பயணம் சென்றாலும் சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன ஆம்புலன்ஸ் வாங்குவதற்கான பொருளாதாரத்தை கீழக்கரையில் இயங்கி வரும் தவ்ஹீத் ஜமாஅத் நான்கு கிளைகளிலும் வழங்கலாம்.
வங்கியின் விபரம்.
TAMILNADU THOWHEEDH JAMAATHA/C NUMBER :- 6401101002184IFSC CODE:- CNRB0006401கனரா வங்கி, கீழக்கரை.
You must be logged in to post a comment.