தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் அதிக அளவு மாணவர்கள், இளைஞர்கள், மத்தியில் அதிக அளவு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இளைய சமுதாயம் சீரழிவதை தடுக்கும் விதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நான்கு மாத காலங்களாக சமூக தீமைகளை கண்டித்து துண்டு பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக அனைத்து கிளை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கடையநல்லூரில் நடைபெற்றது.

பேரணிக்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துல் பாசித், புளியங்குடி பிலால், மருத்துவனைச் அணி செயலாளர் அப்துல்லா குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை மாநிலச் செயலாளர் முகம்மது ஒலி தொடங்கி வைத்தார். பேரணி பேட்டை காதர் மைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வழியாக சென்று இறுதியில் மணிக்கூண்டு அருகே நிறைவடைந்தது. அங்கே கூடியிருந்த மக்கள் மத்தியில் மாநிலச் செயலாளர் முகம்மது ஒலி போதை விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடை மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஷேக் தாவூத் தலைமையில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகளும் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் டவுன் கிளை தலைவர் இஸ்மாயில், மதினா நகர் தலைவர் பாதுஷா, பேட்டை கிளை தலைவர் நல்லூர் சுலைமான், ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் பாரூக், மக்கா நகர் கிளை தலைவர் சேகனா, தவ்ஹீத் நகர் கிளை தலைவர் நிரஞ்சன் ஒளி, இ.பி. கிளை தலைவர் சதாம் உசேன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.