தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு பேரணி..

புளியங்குடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்நிகழ்வில் பேசிய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் போதை பொருள் உபயோகத்தினை ஒழிப்பதில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் எனும் நான்கு மாத கால செயல் திட்டத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹஜா் மைதீன், பீர் மைதீன், முஹமது அலி பிலால், அப்துல் பாசித், செய்யத் அலி, மாணவரணி செயலர் ரபீக் ராஜா மற்றும் புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

போதை ஒழிப்பு பேரணியை தென்காசி மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் துவக்கி வைத்தார். புளியங்குடி பஸ் நிலையம் பின்புறம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அருகில் இருந்து தொடங்கி பிரதான சாலை வழியாக பள்ளிவாசல் நிறுத்தத்தில் பேரணி நிறைவடைந்தது. நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட பேரணியின் இறுதியில் நிறைவுரை ஆற்றிய மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் இடையே சமீபகாலமாக அதிகரித்துள்ள போதைப் பொருள் பழக்கத்தினை முழுவதும் தடுக்கும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில அளவில் போதை விழிப்புணர்வு மற்றும் நல்லுபதேச பிரச்சாரத்தினை செயல் திட்டமாக முன்னெடுத்து வருவதை மேற்கோள் காட்டினார்.

 

மேலும் வெறுப்பற்ற சமத்துவ சமுதாயம் உருவாக தடையாக இருக்கும் போதை பொருள் உபயோகத்தினை ஒழிப்பதில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாகுபாடு இல்லாமல் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். சிறுவர்கள் இடையே அதிகரித்துள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடவும் அவர்களை நேர்வழிப் படுத்தவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் அனைத்து வகையான பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களிடையே ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் கோரினார்.

 

இந்த பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அனைத்து கிளை நிர்வாகிகள் அப்துந் நாசர், செய்யது இப்ராஹிம், முஹம்மது காசிம் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் ஷேக் தாவூத் தலைமையில் தொண்டர் அணியினர் செய்திருந்தனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!